;
Athirady Tamil News

வானத்தில் இருந்து மழையாக விழுந்த நூற்றுக்கணக்கான சிலந்திகள்: விளக்கமளித்த நிபுணர்கள்

0

பிரேசில் நாட்டில் Sao Thome das Letras பகுதியில் வானத்தில் இருந்து மழை போல நூற்றுக்கணக்கான சிலந்திகள் விழுந்த நிலையில், தற்போது அதன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் மர்ம என்ன
நூற்றுக்கணக்கான சிலந்திகள் மழை போல விழும் காட்சிகள் காணொளியாக வெளியாக மக்களை பீதியில் ஆழ்த்தியதுடன், நிபுணர்கள் சிலருக்கு அதன் மர்ம என்ன என்பதை அறியும் ஆர்வத்தையும் தூண்டியது.

காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்ட நபர், பிரேசிலில் சிலந்திகள் வானத்தை கைப்பற்றியுள்ளன. இந்தப் பேரழிவு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் மார்ச் வரை கிராமப்புறங்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையில் நிகழ்கிறது.

500 வரையிலான சிலந்திகளைக் கொண்ட பெரிய கூட்டம் வானம் முழுவதும் வலைகளைப் பின்னுகின்றன. ஆனால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என பதிவிட்டிருந்தார்.

சடங்கை முடித்ததும்
இந்த நிலையில், சிலந்திகள் மழை போல விழுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருந்தபோதிலும், வானத்திலிருந்து சிலந்திகள் விழும் காட்சி ஒரு இயற்கையான நிகழ்வு என்று நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

உயிரியலாளர் கெய்ரான் பாசோஸ் தெரிவிக்கையில், இந்த நிகழ்வு ஒரு பெரிய சிலந்தி வலையால் ஏற்பட்டது என்று விளக்கமளித்துள்ளார், இது நூற்றுக்கணக்கான சிலந்திகள் ஒத்திசைக்கப்பட்ட இனச்சேர்க்கை சடங்கில் ஈடுபட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலந்திகள் தங்கள் சடங்கை முடித்ததும், வலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன, வானத்திலிருந்து சிலந்திகள் மழையாகப் பொழிவது போன்ற மாயையை உருவாக்கின என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.