சுவிட்சர்லாந்தில் வங்கிப் பணியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி
சுவிட்சர்லாந்தில் வங்கிகள் பல ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், வங்கிப் பணியாளர்கள் பலருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கிகள்
சூரிச் மாகாண வங்கியைத் தவிர, மற்ற பல வங்கிகள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருக்கின்றன.
ஏற்கனவே UBS வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, Julius Bär வங்கி, நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த வாரம், எத்தனை பேர் வேலையிழக்க இருக்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை மேலும் பல வங்கிகள் வெளியிட உள்ளன.
ஆகவே, சுவிஸ் வங்கிப் பணியாளர்கள் பலர், வேலை இழக்க நேரிடலாம் என்னும் அச்சத்தில் இருக்கிறார்கள்.