ஐந்து ஆண்டுகளில் 633 இந்திய மாணவ மாணவியர் வெளிநாடுகளில் பலி: கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி

கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாடுகளுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவ மாணவியரில் 633 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
633 இந்திய மாணவ மாணவியர் பலி
கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவ மாணவியரில், 633 பேர், 41 நாடுகளில் உயிரிழந்துள்ளார்கள்.
அதிகபட்சமாக, கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் உயிரிழக்கக் காரணம், சந்தேகத்துக்குரிய வகையிலான துப்பாக்கிச்சூடுகள், கடத்தல்கள், சந்தேகத்துக்குரிய வகையிலான விபத்துக்கள், வன்முறை மற்றும், வெளிநாடுகளின் பாதுகாப்பு விதிமுறைகள் தெரியாமல் உயிரிழத்தல் ஆகியவை என அமெரிக்காவை மையமாகக் கொண்ட இந்திய அமைப்பு ஒன்று கூறுகிறது.
இந்நிலையில், பெரும் எண்ணிக்கையிலான மாணவ மாணவியருக்கு கல்வி அளிக்கும் நாடுகள், அங்கு அவர்களை கவனித்துக்கொள்ளும் அமைப்புகள், அவர்கள் தங்களுக்கெதிரான இனவெறுப்பு மற்றும் வன்முறையை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சியளிப்பதை உறுதி செய்யவேண்டுமென முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலரான Harsh Shringla என்பவர் வலியுறுத்தியுள்ளார்.
அப்பாவி இளம் மாணவ மாணவிகளுக்கெதிரான வன்முறையை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்கிறார் அவர்.