;
Athirady Tamil News

கேக்கில் தங்க மோதிரத்தை மறைத்த வைத்த காதலன்! பசியில் கேக்கை சாப்பிட்ட காதலி

0

காதலியை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் கேக்கிற்குள் தங்க மோதிரத்தை காதலன் மறைத்து வைத்து இருந்த நிலையில், இந்த சம்பவம் விபரீதமாக மாறியுள்ளது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சீனாவை சேர்ந்த காதலர் ஒருவர் தன்னுடைய தோழியிடம் திருமண விருப்பத்தை தெரிவிப்பதற்காக உணவு பொருளான கேக்கில் மோதிரம் ஒன்றை மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த காதலி லியு வீட்டிற்கு பசியுடன் திரும்பிய நிலையில், தனது காதலன் அன்புடன் செய்த இறைச்சி இழைக் கேக்கை(meat floss cake) ஆர்வத்துடன் சாப்பிட்டுள்ளார்.

உள்ளே மறைந்திருக்கும் ஆச்சரியத்தைப் பற்றி அறியாமல், கடினமான பொருள் ஒன்றை கடித்து மென்றுள்ளார், “வேற்றுப் பொருளை” உணர்ந்த இவர் அதனை உடனடியாக துப்பியுள்ளார்.

பின்னர் அவரது காதலன், தன்னை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் இந்த கேக்கை தயார் செய்ததாகவும், காதலி கடித்து துப்பிய பொருள் தங்க மோதிரம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் சங்கடமான தருணத்தை உருவாக்கினாலும், இறுதியில் இந்த தருணம் நகைச்சுவையாக முடிவடைந்தது.

வேடிக்கையான கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட லியு, “கவனம், அனைத்து ஆண்களே: உணவில் திருமண மோதிரத்தை ஒருபோதும் மறைக்காதீர்கள்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் லியு இந்த சம்பவத்தை “இந்த ஆண்டின் மிகவும் நாடகத்தனமான காட்சி” என்று விவரித்தார். இது உண்மையிலேயே மறக்க முடியாத நினைவாக இருந்தாலும், இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.