நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, ஜீவன் தொண்டமான், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நல்ல திட்டங்களுக்கு ஆதரவு
இதன்போது, நாடாளுமன்றத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதோடு நாட்டு மக்களின் நலனுக்காக முன்னின்று செயற்படுவது குறித்தும் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்துள்ளார்.