பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளம் தாய்க்கு எமனான நண்டு; துயரத்தில் குடும்பம்

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான, 28 வயதான இளம் குடும்ப பெண்னே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக பெண் உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்த பெண்ணின் தாயார் அண்மையில் இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் நிலையில் , இந்த சம்பவம் அங்கு வாழும் ஈழத் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.