முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

களுத்துறை அளுத்கம, முல்லப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
முல்லப்பிட்டிய பகுதியில் உள்ள சுவர்ண பிம்பராம விகாரைக்கு அருகிலுள்ள தொடருந்து கடவையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலி நோக்கி பயணித்த அதிவேக தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் சிக்கிய நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.