;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறிய மக்கள்!

0

பிரபல ஐரோப்பிய நாடொன்றில் மக்கள் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறியுள்ளனர்.

நோர்வே மின்சார வாகனங்கள் (EVs) மீது மிகுந்த கவனம் செலுத்தி வரும் நாடாக திகழ்கிறது.

இதற்கு ஒரு முக்கிய சான்றாக, 2025 ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 96 சதவீதம் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாகும்.

நோர்வே கடந்த மாதம் மொத்தமாக 9,343 புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் 8,954 கார்கள் தூய்மையான மின்சார வாகனங்களாகும்.

இதனுடன் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஹைபிரிட் கார்களை சேர்த்தால், இந்த எண்ணிக்கை 96.8 சதவீதமாக உயர்கிறது.

நோர்வே 2025-க்குள் 100% மின்சார வாகன விற்பனை என்பதையே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு நோர்வே வழங்கும் ஊக்குவிப்புகள்

  • வரி விலக்கு – மின்சார கார்கள் வாங்குவோருக்கு பல்வேறு வரி விலக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
  • சுங்கக் கட்டணம் (Toll) இல்லை – பொதுவெளியில் சாலைகளை பயன்படுத்த மின்சார வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • இலவச பார்கிங் – பல நகரங்களில் மின்சார கார்கள் இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
  • பொது போக்குவரத்து பாதைகளை பயன்படுத்தலாம் – மின்சார கார்கள் பேருந்து மற்றும் பொது போக்குவரத்து வழிகளை பயன்படுத்தலாம்.

உலகிற்கு உதாரணமாக நோர்வே
அதிகளவான EV-க்களை பயன்படுத்தும் நாடாக நோர்வே மாறியுள்ளது.

அதன் மின்னியமிப்பு (Electrification) திட்டத்தின் காரணமாக, மக்கள் மின்சார கார்கள் வாங்க அதிகம் முனைந்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஏற்கனவே பரவலாக உள்ள EV கலாச்சாரம், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது.

இவ்வளவு குறுகிய காலத்தில் நோர்வே பரிசோதனைக்காக தொடங்கிய திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது. இது மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.