;
Athirady Tamil News

இந்தியாவில் மீண்டும் ஒரு கோடீஸ்வர குடும்ப திருமணம்: 10,000 கோடி நன்கொடை வழங்கிய கோடீஸ்வரர்

0

இந்திய கோடீஸ்வரர் அம்பானி குடும்பத் திருமணம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த நிலையில், மற்றொரு கோடீஸ்வரர் தனது மகனுடைய திருமணத்தை நடத்திவைத்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதானி குடும்பத் தலைவரான கௌதம் அதானியின் மகனான ஜீத் அதானியின் திருமணம் நேற்று அஹமதாபாதில் நடைபெற்றுள்ளது.

ஜீத் அதானி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகளான திவா ஷாவை கரம்பிடித்தார்.

தனது மகனுடைய திருமணத்தையொட்டி, கௌதம் அதானி, 10,000 கோடி ரூபாயை பல்வேறு தொண்டுநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 5,690 கோடி அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது 16,92,35,83,895.80 ரூபாய்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.