சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி! 28 பேர் மாயம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்ததுடன், 28 ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு சீனாவின் ஜனாதிபதி ஜூ ஜின்பிங் அறிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள 200 ற்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரையில் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தற்போது மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.