;
Athirady Tamil News

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் விலகல்

0

கரீபியன் கடலில் சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) நிலநடுக்கத்தின் மையம் ஹோண்டுராஸுக்கு வடக்கே சுமார் 20 மைல்களிலும், கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 130 மைல்களிலும் இருந்ததாக தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, 10 அடி (3 மீட்டர்) வரை அலைகள் உயரக்கூடும் என்ற கணிப்பில், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

Puerto Rico மற்றும் Virgin தீவுகளும் இதில் அடங்கும்.

சுனாமி அச்சுறுத்தல் குறைந்ததால், பின்னர் எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.

கேமன் தீவுகள் அரசாங்கம் கடற்கரைப்பகுதி மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது.

சுனாமி எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டாலும், நிலநடுக்கத்தால் நிலத்தில் ஏதேனும் சேதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டதா என்பது தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.