சர்வதேச ரீதியில் பேசுபொருளான இலங்கையின் குரங்கும் மின்தடையும்

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குரங்கினால் இலங்கையில் ஏற்பட்ட மின்தடை என்ற பொருளில் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மின்சாரத் தடை
நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு குரங்கு ஒன்று காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.பீ நியூஸ், டிம்சும்டெய்லி ஹொங்கொங், தி பிரசல்ஸ் டைம்ஸ், நியூஸ் 18, தி பெனிசுலா கட்டார், சீ.என்.பி.சீ, ஜீயோ இங்கிலிஷ், தி பிஸ்னஸ் ஸ்டார்டர்ட், வெக்கார்ட் நியூஸ்பேப்பர், பெஸ்ட்போஸ்ட், வியோன், தி ஸ்டெரிட் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் குரங்கினால் இலங்கை முழுவதிலும் மின்தடை என்ற அடிப்படையில் செய்தி தலைப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.