;
Athirady Tamil News

“சீனாவின் சகோதர பாசம்” யாழ்ப்பாணத்தில்!

0

சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 10.02.2025 நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது 1070 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.