கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.
தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த அங்கிருந்த ஏராளமான வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று தொடா்ச்சியாக மோதின. இந்த விபத்தில் பேருந்து மட்டும் பாலத்தில் இருந்து 115 அடி (35 மீட்டா்) ஆழத்தில் இருந்த கழிவுநீா் ஓடையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது.
இதில் உயிரிழந்த 51 பேரில் குழைந்தைகளும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபா் பொ்ணாா்டோ அரேவலோ, ஒரு தேசிய துக்க தினம் அறிவித்துள்ளாா்.