இந்தியாவுக்கான 21 மில்லியன் டொலர் நிதி ரத்து! மஸ்க்கின் துறை அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
21 மில்லியன் டொலர் நிதி
ட்ரம்பின் நிர்வாகம் பட்ஜெட்டைக் குறைத்துள்ளதால் இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கான கோடிக்கணக்கான டொலர் நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
அதன்படி இந்தியாவுக்கான 21 மில்லியன் டொலர் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய நிதியை நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே ட்ரம்ப் அறிவித்து கையெழுத்துமிட்டார்.
அதிரடி நடவடிக்கை
இதுதொடர்பாக எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காளதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், 29 மில்லியன் டொலர் செலவிலான முயற்சியையும் நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும், அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதி இந்த திட்டங்களுக்கு செலவிடப்படவிருந்ததாகவும், அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மஸ்க் தலைமையிலான DOGE துறையானது அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கும், அரசாங்க செலவினங்களை பெருமளவு குறைப்பதற்கும் ட்ரம்பின் அனுமதியுடன் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது.