2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்; அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் குறித்த தீர்மானம்
இலங்கையில் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருளாதார திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நடாளுமன்றில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி, உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தரிசாக மாறிய பல நிலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.