யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டார் என கடந்த 14ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.