ரொறன்ரோ பனிப்பொழிவை அகற்ற 3 வாரங்கள் தேவைப்படும்

ரொறன்ரோவில் பனிப்பொழிவினை அகற்றுவதற்கு 3 வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே வாரத்தில் மூன்று தடவைகள் பாரியளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வீதிகளில் படர்ந்துள்ள பனியை அகற்றுவது மிகவும் சவால் மிக்கது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை 10 சென்றிமீற்றரும், கடந்த புதன்கிழமை 20 சென்றிமீற்றரும் இன்று 25 சென்றிமீற்றரும் பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.