செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – பொலிஸில் முறைப்பாடு

யாழ் அரியாலை பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தி்ல் முறைப்பாடு! சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடைஅமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் காணப்பட்டது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தி்ல் முறைப்பாடு ஒன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடை ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது அப் பகுதியில் பல மனித எச்சங்கள் காணப்பட்டதையடுத்து.
அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
அது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தி்ல் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதற்காக அக் கட்சியின் உறுப்பினர் வை.கிருபாகரன் இரண்டு தினங்களாக முயற்சி செய்து, இன்றைய தினம் முறைப்பாட்டினை யாழ் குற்றப்பிரிவு பொலீஸாரிடம் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ் மனித எச்சங்களானது 1995,1996ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட செம்மணி படுகொலைகளின் எச்சங்களாக இருக்கலாம் என்று அவ் முறைப்பாட்டில் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.