சட்டத்தரணி வேடத்தில் பெண்; நீதிமன்ற துப்பாகிச்சூடு தொடர்பில் புதிய தகவல்

பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, சட்டத்தரணி வேடத்திலேயே வந்த பெண் ஒருவர் ஆயுதத்தை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.