;
Athirady Tamil News

பாரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறதா? எச்சரிக்கும் ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன்

0

மெக்சிகோ கடற்கரை ஒன்றில், ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன் என அழைக்கப்படும் மீன் ஒன்று கரைக்கு வந்த விடயம், பாரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறதோ என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

‘உலகத்தின் அழிவு நாள்’ மீன்
Oarfish என்னும் மீன் வகையைச் சேர்ந்த, ‘doomsday fish’ அதாவது, உலகத்தின் அழிவு நாள் மீன் என அழைக்கப்படும் அரியவகை மீன் ஒன்று, மெக்சிகோவிலுள்ள கடற்கரை ஒன்றில் கரைக்கு வந்துள்ளது.


இந்த மீன்கள் அரியவகை ஆழ்கடல் மீன்கள். அவை பொதுவாக கரைக்கு வருவதில்லை.

இந்நிலையில், அந்த உலகத்தின் அழிவு நாள் மீன் திடீரென கரைக்கு வந்ததால், ஏதோ பிரச்சினை ஏற்படப்போகிறது, ஒருவேளை நிலநடுக்கம் ஏதேனும் ஏற்படக்கூடும் என மக்கள் கருதுகிறார்கள்.

Robert Hayes என்பவர் அந்த மீனை வீடியோ எடுத்துள்ள நிலையில், அந்த மீன் கரைக்கு வந்ததும், மூன்று முறை தாங்கள் அதை கடலுக்குள் விட்டும், மீண்டும் மீண்டும் அது கரைக்கே வந்துவிட்டது என்கிறார்.

அந்த வீடியோ சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆழ்கடலில் மட்டும் காணப்படும் அந்த மீன் கடல் பரப்புக்கு வந்துள்ளதால், ஏதோ பாரிய நிலநடுக்கம் போன்ற பேரழிவு ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், கடல் பாதுகாப்பு தொடர்பான இணையதளமும், இந்த கருத்தை ஆமோதிக்கிறது.

இந்த மீன் கடற்பரப்புக்கு வந்தால் விரைவில் நிலநடுக்கம் போன்றதொரு இயற்கைப் பேரழிவு ஏற்படலாம் என புராணங்கள் சொல்வதாகவும், அதனால்தான் அது உலகத்தின் அழிவுநாள் மீன் என அழைக்கப்படுவதாகவும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அதைவிட குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், 2011ஆம் ஆண்டில், ஜப்பானில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 9.1ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன், சுமார் 20 ’உலகத்தின் அழிவு நாள் மீன்கள்’ கரைக்கு வந்துள்ளன.

Honshu என்னும் பகுதியைத் தாக்கிய அந்த பாரிய நிலநடுக்கத்தால் 18,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.