யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் நீண்டகாலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.