;
Athirady Tamil News

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

0

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் மருந்துப் பொருள் நிறுவனம் GSK தயாரித்த இந்த தடுப்பூசிகள், அவசியமான தருணங்களில் பயன்படுத்த முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் தற்போது குறைவாக உள்ளது என்று பொது சுகாதார நிறுவனம் கூறினாலும், அதிகப் பாதிப்பு அடையக்கூடிய நபர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

2023 நவம்பர் மாதம் கனடாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு H5N1 வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

உலகளவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கோடைகால பறவை இடம்பெயர்ச்சி (Spring Migration) மூலம் வைரஸ் மேலும் பரவலாம் என்ற அச்சம் உள்ளது.

தொற்று அபாய நிலையை கருத்தில் கொண்டு, 60% தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பறவை காய்ச்சல் தடுப்பூசி சாதாரண காய்ச்சலுக்கு (Seasonal Flu) பாதுகாப்பளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.