;
Athirady Tamil News

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சாதனை படைத்த சீனா

0

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. கடந்த வருடம் இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியாவை பின் தள்ளி இச்சாதனையை பதிவு செய்துள்ளது.

உலக மென்சக்தி சுட்டெண்
ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) ஆறாவது முறையாக வெளியிட்டுள்ள உலக மென்சக்தி சுட்டெண் (Global Soft Power Index)அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கருதப்பட்ட 8 அடிப்படைக் காரணிகளில் 6 மற்றும் அளவிடப்பட்ட மூன்று பண்புகளில் இரண்டில் சீனா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தரப்படுத்தலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரித்தானியா, ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களை பதிவு செய்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.