ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க தயார்! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க தயார்
உக்ரைனில் அமைதியை கொண்டு வந்தால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கீவ்வில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதில், உக்ரைனில் அமைதி கொண்டு வரப்பட்டாலோ அல்லது உக்ரைனை நேட்டோவின் உறுப்பினராக சேர்த்தாலோ உக்ரைனிய ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
"Are you ready to resign as President if it means peace for Ukraine?"
"Yes, if it means peace for Ukraine. Or I can exchange it for joining NATO," – President Zelenskyy.A large conference by President Zelenskyy and other Ukrainian military and civilian leaders is taking place… pic.twitter.com/eJDutBr5cd
— Anton Gerashchenko (@Gerashchenko_en) February 23, 2025
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனின் நெருங்கிய கூட்டாளியாகவும் உக்ரைன்-மாஸ்கோ இடையே சிறந்த மத்தியஸ்தாராகவும் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பங்களிப்பு மத்தியஸ்தத்தை விடவும் அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்