;
Athirady Tamil News

பிரித்தானியாவில் சொந்த குடும்பத்தை கொன்ற இளைஞர்: குற்றத்தை ஒப்புக்கொண்டு வழங்கிய அதிர்ச்சி!

0

பிரித்தானியாவின் லூடனில் சொந்த குடும்பத்தை கொலை செய்த வழக்கில் இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞர்

கடந்த ஆண்டு லூடனில் தனது தாய் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களை கொலை செய்த 19 வயது இளைஞன் நிக்கோலஸ் ப்ராஸ்பர்(Nicholas Prosper) தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

48 வயதான ஜூலியானா ஃபால்கன்(Juliana Falcon), 13 வயதான கிசெல் ப்ராஸ்பர்(Giselle Prosper) மற்றும் 16 வயதான கைல் ப்ராஸ்பர்(Kyle Prosper) ஆகியோரின் மரணத்திற்கு தான் காரணம் என்று லூடன் கிரவுன் நீதிமன்றத்தில் இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கொலை குற்றச்சாட்டுகளுடன், சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் பொது இடத்தில் சமையலறை கத்தி வைத்திருந்தது உள்ளிட்ட பல தொடர்புடைய குற்றங்களையும் அவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் நிக்கோலஸ் ப்ராஸ்பருக்கு மார்ச் 5 ஆம் திகதி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் வாவுல்ட்ஸ் பேங்க் டிரைவ்(Wauluds Bank Drive) அருகே லீபேங்க்(Leabank) பகுதியில் உள்ள அவர்களது குடியிருப்பில் மூன்று பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணை முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.