பெண்ணின் வயிற்றுக்குள் Surgical Mop.. பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பெண்ணின் வயிற்றுக்குள் Surgical Mop வைத்துத் தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் உள்ள புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அந்த பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது வயிற்றில் ஏதோ இருப்பதுபோல் உணர்வதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
உடனடியாக அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துள்ளனர். அதில் 10 செமீ அளவில் கட்டி போன்று ஏதோ இருப்பதை உணர்ந்தனர். அதன்பிறகு CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டனர். அப்போது பணம் இல்லதால் காலப்போக்கில் சரியாகிடும் என்று தம்பதிகள் நினைத்துள்ளனர்.
ஆனால் நாளுக்கு நாள் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது . மேலும் வயிற்று வலி, ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தன் குழந்தையைத் தூக்கவே முடியாத நிலையிலிருந்துள்ளார். பின்னர் CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றிலிருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது.இந்த சம்பவம் மங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.