கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சஞ்சிகை விமர்சன அரங்கு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று( 25.02.2025) இடம்பெற்ற ஒன்று கூடல் கி.செ. துரையின் உலகச் செய்திகள் என்ற சஞ்சிகையின் வெளியீடு மற்றும் விமர்சன அரங்காக அமைந்தது .
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி திருக்குமரன் அஞ்சலோ பெலினி நெறிப்படுத்தினார்
உலகச் செய்திகள் சஞ்சிகைக்கான விமர்சன உரைகளை விஞ்ஞான நெறி ஆசிரியர் மாணவர் இலகுநாதன் செந்தூர்ச் செல்வன், ஆங்கில நெறி ஆசிரிய மாணவி நிரோஜன் கௌசிகா கிறிஸ்தவ நெறி ஆசிரிய மாணவி சுதாகர் கமலினி ஆகியோர் நிகழ்த்தினர்
கலாசாலையின் பழைய மாணவரும் (1980/81) பிரபல ஊடகவியலாளருமாகிய கே.எஸ். துரை – ஆசிரியரால் முடியுமா? என்ற பொருளில் ஊக்குவிப்பு உரை (motivational speech) ஆற்றினார்
கலாசாலை அதிபர் ச. லலீசன் நிறைவுரை ஆற்றினார்
உலகச் செய்திகள் இதழின் முதற்பிரதியை ஆசிரியர் கி. செ. துரை கலாசாலை அதிபரிடம் கையளித்தார்
52 பக்கங்கள் கொண்ட உலகச் செய்திகள் சஞ்சிகை கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது