கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் முன்னுரிமை பட்டியலை தயாரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் முன்னுரிமை பட்டியலை தயாரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S. முரளிதரன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது.
மாவட்டத்தில் உள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான வீதிகள்,உள்ளூராட்சி திணைக்கள வீதிகள்,மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழான வீதிகள்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான வீதிகளின் அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இன்றைய கலந்துரையாடலின் ஊடாக எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளின் முன்னுரிமை பட்டியல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிற்கு சமர்ப்பித்து கருத்துக்கணிப்பின் பின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.