;
Athirady Tamil News

109 மேலதிக வாக்குகளால் அனுரவின் பட்ஜெட் வெற்றி; செல்வம் எம்பியும் ஜனாதிபதி பக்கம்

0

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அருச்சுனா, சிறிதரன் வாக்களிக்கவில்லை
2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அரசு தரப்பினருடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்தார்.

இந் நிலையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி .ஜீவன் தொண்டமான்,, நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன,ரவி கருணாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன .
அதேவேளை சிறீதரன் எம்.பி தலைமையிலான தமிழரசுக் கட்சியும் சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான இ.அர்ச்சுனா உட்பட 23 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.