;
Athirady Tamil News

திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!

0

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது.

இதனால் அதிர்ச்சியடைத்த ஊழியர்கள் நிறுவனத்தை குறைகூறியதை அடுத்து நிறுவனம் அந்தக் கொள்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஊழியர்கள் அதிர்ச்சி
தென் சீனாவில் உள்ள ஷண்டோங் மாநிலத்தில் அமைந்துள்ள The Shuntian Chemical Group நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The Shuntian Chemical Group இல் 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் அங்கு வேலை செய்கின்றனர். இந்நிலையில் நிறுவனத்தின் திருமண விகிதத்தை அதிகரிக்க அது புதிய கொள்கையை கடந்த மாதம் (ஜனவரி) அறிவித்தது.

அந்தக் கொள்கையின்படி, 28 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்து குடித்தனத்தைத் தொடக்கியிருக்க வேண்டும்.

அடுத்த மாதத்திற்குள் (மார்ச்) அது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூறவேண்டும் என்றும் நிறுவனம் கெடு விதித்ததாக கூறப்படுகின்றது.

ஜூன் இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நிறுவனம் அவர்களை மதிப்பிடும் என்றும், செப்டம்பர் இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என்றும் நிறுவனம் அறிவித்ததாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.