;
Athirady Tamil News

மஹா சிவராத்திரி; திருக்கேதீஸ்வர ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

0

மஹா சிவராத்திரி தினத்திற்காக இலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர பெருமளவு பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று (26) நடைபெற்று வருகின்றது.

சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்
சிவன் அடியவர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

மகா சிவராத்திரி நிகழ்வை ஒட்டி விசேட போக்குவரத்து சேவைகள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது.

அதேநேரம் இம்முறை சிவராத்திரி நிகழ்வுக்கு என விசேட பொலிஸ்,ராணுவ அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.