யாழ்ப்பாணம் -நாகப்பட்டினம் கப்பல் சேவை திடீரென நிறுத்தம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று முதல் நாளை மறுதினம் வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் மார்ச் 1ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.