;
Athirady Tamil News

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து

0

உலகின் பெரும் கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

250,000 குடிமக்கள் அவரது கனடா பாஸ்போர்ட்டை பறிக்கக் கோரி நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

மஸ்க், டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளராக இருந்து, “கனடா ஒரு உண்மையான நாடல்ல” என்று கூறியதன் பிறகு கனேடிய மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதற்கு முன்னரே, டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் கனடாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கவும், அதை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஸ்க், டிரம்ப்பின் நிர்வாகத்தில் DOGE (Department of Government Efficiency) தலைவராக இருப்பதால், கனேடிய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது செல்வமும் அதிகாரமும் பயன்படுத்தி கனேடிய தேர்தல்களை பாதித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், மஸ்க்கின் குடியுரிமை நீக்கப்படுவது கடினம். கனடா தகவல் மோசடி அல்லது தேசத்துரோக குற்றச்சாட்டுகளில் மட்டுமே குடியுரிமையை நீக்க முடியும்.

கனடாவின் சட்டத்தின்படி, மஸ்க் தனது குடியுரிமையை சட்டப்பூர்வமாக பெற்றிருப்பதால், அதை திரும்பப் பெற முடியாது என சட்ட பேராசிரியர் ஆட்ரி மெக்லின் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.