;
Athirady Tamil News

இங்கிலாந்தில் வேலையிழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள்: மருத்துவச் செயலரின் நடவடிக்கை

0

பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க இருக்கிறார்கள்.

வேலை இழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள்
பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் (NHS England) பணியாற்றும் ஆயிரக்கணக்கானோரின் வேலைகளைப் பறிக்க இருக்கிறார் பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting).

ஏற்கனவே இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்ட் (Amanda Pritchard), பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் கொடுத்த அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமண்டாவுக்கு பதிலாக அந்த பதவிக்கு சர் ஜிம் மேக்கீ (Sir Jim Mackey) என்பவரை நியமிக்க இருக்கிறார் வெஸ்.

இங்கிலாந்தில் வேலையிழக்கும்

NHS அமைப்பின் புதிய யுகத்தை உருவாக்க இருப்பதை இலக்காகக் கொண்டுள்ள வெஸ், அதற்காக அந்த அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறார்.

ஆக, இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்டைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்க இருக்கிறார்கள் என்பது இப்போதைக்கு வெளியாகியுள்ள செய்தி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.