ஜேர்மனிக்கு அணுவாயுத போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டம்

ஜேர்மனிக்கு அணுவாயுதத்திறன் கொண்ட போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பா பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் நிலையில், பிரான்ஸ் ஐரோப்பாவை அணு ஆயுதத்தால் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக ஜேர்மனியில் அணு ஆயுதம் கொண்ட போர்விமானங்களை நிலைநிறுத்தும் நோக்கில் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக The Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை, அமெரிக்கா ஜேர்மனியில் 100 அணு தலைகள் கொண்ட பாதுகாப்பு வளாகத்தை உருவாக்கியுள்ளது.
ஆனால், ஜேர்மனியின் அடுத்த சேன்சிலராக தெரிவாகும் வாய்ப்புள்ள ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), ஐரோப்பாவின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அவற்றின் அணுசக்தி பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் பிரெஞ்சு அதிகாரி ஒருவர், “ஜேர்மனியில் அணு ஆயுத வீரப் படைகளை நிலைநாட்டுவது, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு உறுதியான செய்தியை அனுப்பும்” என தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தங்களின் அணு பாதுகாப்பு வலயத்தை ஜேர்மனிக்கு வழங்க முடிந்தால், அது ஐரோப்பாவின் பாதுகாப்பு தன்னிறைவு பெறும் வழிவகையாக இருக்கும்.
இந்நிலையில், அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஜேர்மனியிலிருந்து எடுத்துவிட்டால் தான், ஜேர்மனியின் அணு பாதுகாப்பு கோரிக்கைக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.