;
Athirady Tamil News

10 ஆண்டுகால தேடல்! கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்தினர் அதிர்ச்சி

0

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்த நபரின் உடல் எச்சங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மனித எச்சங்கள்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தேடலுக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்ட ரனியா அலைத்தின்(Rania Alayed) உடலை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாக நம்புகின்றனர்.

கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினருக்கு (GMP) கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில், நார்த் யார்க்ஷயரின் திர்ஸ்க் நகரில் A19 நெடுஞ்சாலைக்கு அருகில் மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

கணவனால் கொலை செய்யப்பட்ட பெண்

ரனியா அலைத் மான்செஸ்டரின் கோர்டனைச் சேர்ந்த அவரது கணவர் அகமது அல் கதிப்பால் கொல்லப்பட்டார்./// இந்த கொலை சம்பவத்தை அடுத்து, கணவர் 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கணவர் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், அலைத்தின் உடலை இதுவரை கண்டுபிடிக்கவில்லை./// இதனால், பல ஆண்டுகளாக அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குடும்பத்தினர் அதிர்ச்சி
முறையான அடையாளம் காணும் பணி நிலுவையில் இருந்தாலும், இந்த எச்சங்கள் ரனியாவினுடையது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முக்கியமான முன்னேற்றம் குறித்து அலைத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைத்தின் மகன் யாசான்(Yazan), இந்த கண்டுபிடிப்பு குறித்து குடும்பத்தினரின் ஆழ்ந்த எதிர்வினையை வெளிப்படுத்தினார்.

“ஒரு தசாப்தத்திற்கும் மேலாக என் தாயின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வினோதமான மற்றும் எதிர்பாராத நிகழ்வு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 11 ஆண்டுகளாக, அவருக்கு ஒரு முறையான இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பதே எங்கள் மிகப்பெரிய விருப்பமாக இருந்தது. மேலும் அவரது இறுதி ஓய்வு இடத்தில் சில பூக்களை வைக்கும் எளிய செயல், எங்களின் ஆறுதலாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.