;
Athirady Tamil News

சம்மாந்துறை தொகுதியின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம் ஆரம்பம்.

0

“கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தினை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை தொகுதியில் செயற்படுத்தும் பொருட்டு நேற்று (26) சம்மாந்துறை கல்லரிச்சல் பொட்டியர் சந்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக அம்பாறை கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ கமல் நெத்திமி, சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல்கஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ரிசாட் .எம் .புஹாரி, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ,கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத், மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் குறிப்பாக சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம், அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் போன்ற இடங்களில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.