;
Athirady Tamil News

மகா சிவராத்திரியில் யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை

0

மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் இலவசமாக 89 நோயாளர்களுக்கு கண் வெண்புரை அகற்றல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சை
அயர்லாந்தின் SONYA LYNCH நினைவு நிதியத்தின் பங்களிப்பில் கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் M.மலரவன் தலைமையில் கண் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினால் குறித்த நற்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 52 பேர் கிளிநொச்சி மாவட்டத்தினையும், 37 பேர் யாழ் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

வளப்பற்றாக்குறைகளின் மத்தியிலும் இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவில் 1925 கண் வெண்புரையகற்றல் சத்திர சிகிச்சைகளும் 250 இதர சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.