கரைச்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவிகளின் மனைப்பொருளியல் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மனைப்பொருளியல் கண்காட்சி இன்று(27.02.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பவானந்தன் தலைமையில், அம்பாள் குளம் பொதுநோக்கு மண்டபத்தில் காலை 10.30மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ச.மாதுகி, சிறப்பு விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சி .உமாபாலன்,
கௌரவ விருந்தினர்களாக அம்பாள்குளம் கிராம உத்தியோகத்தர் இ.றஜீவனா மற்றும் உதயநகர் மேற்கு கிராம உத்தியோகத்தர் ஜெ.விக்னேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மனைப்பொருளியல் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது பயிற்சி பெற்ற மாணவிகளின் ஆடைகள், கேக் வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டத்துடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகள், கற்கைநெறி மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.