ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும் மேக்ரானுக்கு பிரெட்ரிக் மெர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்து ஆட்சியை அமைப்பார் என எதிர்பார்க்கப்படும் பிரெட்ரிக் மெர்ஸ் பிரான்சுக்கு சர்ப்ரைஸாக வருகை புரிந்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சர்ப்ரைஸ்
ஜேர்மனியில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் CDU கட்சி அதிக வாக்குகள் பெற்றுள்ளது.
அக்கட்சியின் சேன்ஸலர் வேட்பாளரான பிரெட்ரிக் மெர்ஸ் அடுத்து ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆட்சி அமைக்கும் முன்பே, பாரீஸ் சென்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் மெர்ஸ்.
இருவரும், உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்காவின் கொள்கை மாற்றம் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.