;
Athirady Tamil News

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிப்பு

0

ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனது வீட்டில் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

நேற்று புதன்கிழமையன்று, அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களுடைய மரணத்தில் சந்தேகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

சூப்பர்மேன் திரைப்படத்தில் வில்லனான நடித்த ஜீன் ஹாக்மேன், Mississippi Burning, Unforgiven உட்பட ஏராளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜீன் ஹாக்மேன், The French Connection திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்காகவும், Unforgiven திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்காகவும் என, இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர் ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.