;
Athirady Tamil News

ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்! போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வெடித்த வார்த்தை மோதல்

0

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஜெலென்ஸ்கி-டிரம்ப் சந்திப்பு
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த விவாதங்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துள்ளார்.


ஜெலென்ஸ்கி-வான்ஸ் வார்த்தை மோதல்!
இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என தெரிவித்தார்.

இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார்.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறுக்கிட்டார்.


ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்

உக்ரைனிய ஜனாதிபதியை பார்த்து “நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம் என்று கோபத்துடன் தெரிவித்தார்.

“உங்களிடம் போதுமான துருப்புகள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது”

“நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, எங்கள் ஆயுதங்கள் இல்லையென்றால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும்.

நீங்கள் தனியாக இருந்ததில்லை, ஆனால் நீங்கள் எங்களின் முட்டாள் ஜனாதிபதி மூலம் $350 பில்லியன் கொடுத்துள்ளோம், எங்கள் ஆயுத தளவாடங்கள் இல்லையென்றால் இந்த போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, நான் புடினிடம் இருந்து இதனை 3 நாட்களில் கேட்டேன் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.