பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் மனைவி குறித்து இழிவாக பேசிய ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மருடனான சந்திப்பின் போது அவரது மனைவி தொடர்பில் தரக்குறைவான கருத்தொன்றை டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஈர்க்கப்பட்டேன்
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியும், பிரித்தானியப் பிரதமரும் பதிலளிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையேயான நெருக்கமான உறவை பிரித்தானியா தெரிவு செய்ய வேண்டுமா என்று ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டது.
ஆனால் அந்த கேள்விக்கு அவர் பதிலளிக்காமல், விக்டோரியா ஸ்டார்மர் மீது தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அவர் அழகான, சிறந்த பெண்மணி என்றும் வர்ணித்துவிட்டு, எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றார்.
மேலும், ஸ்டார்மர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், தங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இறுதியில், பிரித்தானியா அமெரிக்காவை விட ஐரோப்பாவிடம் நெருங்குவதில் தாம் கவலைப்படவில்லை என முடித்துள்ளார்.
மிகப்பெரிய சொத்து
பிரதமர் ஸ்டார்மரின் மனைவி விக்டோரியா தொடர்பில் ட்ரம்ப் மலிவான கருத்தை முன்வைப்பது இது முதல் முறையல்ல.
பிரதமர் ஸ்டார்மரின் மனைவி அழகாக இருப்பதாக ட்ரம்ப் முன்பு கூறியதுடன், கிறிஸ்துமஸுக்கு முன் தலைவர்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடியபோது, லேடி விக்டோரியா பிரதமரின் மிகப்பெரிய சொத்து என்றும் வர்ணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.