ஜேர்மனியில் புதிய ஆட்சி அமைவது எப்போது? கூட்டணி பேச்சு வார்த்தை துவங்கியது

ஜேர்மனியில், புதிய அரசு ஆட்சி அமைக்கப்போவது எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஆட்சி அமைவது எப்போது?
ஜேர்மன் பொதுத்தேர்தலில் CDU கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அடுத்த சேன்ஸலராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஆட்சி அமைக்க விரும்புவதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
அதுவரை, இப்போதைய சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸே ஆட்சியைத் தொடர இருக்கிறது.
இதற்கிடையில், அதிக இருக்கைகள் பெற்றும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெர்ஸ் கட்சியிடம் இருக்கைகள் இல்லை.
ஆக, முன்போலவே கூட்டணி அரசு அமையத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆகவே, கூட்டணி அமைப்பது தொடர்பில், Christian Democratic Union (CDU) கட்சியும், Social Democrats (SPD) கட்சியும் பேச்சுவார்த்தைகளைத் துவக்க இருக்கின்றன.