கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; இரு முக்கிய சந்தேக நபர்கள் கைது

சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரு முக்கிய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த வாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.
கம்பஹா பகுதியில் வைத்துக் கொழும்பு குற்றப்பிரிவால் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.