சீனா: படகு விபத்தில் 11 போ் உயிரிழப்பு

சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் ஹூணன் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுயி நதியில் 19 பேருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு, அந்த வழியாக வந்துகொண்டிருந்த எண்ணெய் கசிவு சுத்திகரிப்புப் படகுடன் மோதியது.
இதில் அந்த பயணிகள் படகு நீரில் மூழ்கியது.அதையடுத்து, விபத்துப் பகுதியில் இருந்து மூன்றுபேரை மீட்புக் குழுவினா் மீட்டனா். மேலும் அங்கிருந்து 11 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மாயமானவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை.