யாழில் பெய்து வரும் கன மழையால் 10 பேர் பாதிப்பு

யாழில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.