;
Athirady Tamil News

விருந்தில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய கொடூரம் – காரணத்தை கேட்டு மிரண்ட போலீஸ்!

0

நண்பரின் காதை மென்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஹிரானந்தனி அடுக்குமாடிக் குடியிருப்பில் திரைப்பட தயாரிப்பாளரான ஷ்ரவன் லீகா, (37வயது) மற்றும் இவரது நண்பர் விகாஸ் மேனன் (32 வயது) வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பட்லி பாடா எனும் பகுதியில் அமைந்திருக்கும் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.அதில் ஷரவன் லீகா மற்றும் அவரது நண்பர் விகாஸ் மேனன் (32 வயது) இருவரும் சென்று உள்ளனர்.

அப்போது நிகழ்ச்சியில் திடீரென நண்பர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அது வாக்குவாதமாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் ஷ்ரவன் லீகாவின் காதில் ஒரு பகுதியை விகாஸ் மேனன் கடித்து விழுங்கியுள்ளார். இதனால் வலி தாங்காமல் ஷரவன் கத்தி கதறியுள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்

மேலும் இந்த சம்பவத்தைக் கண்ட அருகிலிருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷரவன் காதிலிருந்து ரத்தம் வழியத் துவங்கியதும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதற்கு ₹ 4-5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கசர்வடவ்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விகாஷ்மேனனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.