பொன் அணிகளின் போர் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகளின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆரம்பமாகியுள்ளது.
சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் தினம் வியாழக்கிழமை ஆரம்பமான போட்டிகள் நாளை மறுதினம் சனிக்கிழமை வரையில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.